Friday, May 15, 2020

மகளிர் தின நல் வாழ்த்து


ஆருயிர் தந்தாள்

        அன்னையின் வடிவிலே

ஆருயிர் கலந்தாள்

        தாரத்தின் வடிவிலே

அன்பு பாசமுடன்

        சோதரியின் வடிவிலே


ஆருயிராய் வந்தாள்

        மகளின் வடிவிலே

அழகு நட்பு தந்தாள்

        தோழி வடிவிலே

அறிவு கல்வி தந்தாள்

        ஆசிரியை வடிவிலே


அருள் தந்து நின்றாள்

        அம்பிகை வடிவிலே

அனைத்து மங்கையரின்

        பெண்மை போற்றுவோம்

அணங்கை மகளிர் தின

        நல் வாழ்த்து பகர்வோம்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: