Friday, May 15, 2020

அகத்தியர்


ஸப்த ரிஷி

அகத்தியமே

குன்றாப் புகழ்

தமிழ் முனியே

தவச் சீலப்

பெருந் தகையே

குறு முனியே

நீ வாழிய  (ஸ)

 

பொதிகை வளர்

பொங்கு நதி

புண்ணிய நதி

காவிரி தனை

தந்தருளிய  

குட மதிலுதித்த

குட முனியே

நீ வாழிய ! (ஸ)

 

நேர் நேர் தேமா

நிரை நேர் புளிமா

எதுகை மோனை

சீர் யாப்பு

இலக்கணம் வகுத்து

நின்ற பைந்தமிழ்

புலமையே

நீ வாழிய ! (ஸ)

 

விந்திய மலை

செருக்கு அடக்கி

கடலை அருந்தி

தட்சிண மலை

வந்தருளிய

வான் முனியே

தவ முனியே

நீ வாழிய ! (ஸ)

 

காக உரு

கொண்டு நின்று

கமண்டலத்தை

தட்டி நின்று

காவிரியைத் தந்த

கரி முகனை

கணபதியை

குட்டி நின்றவனே (ஸ)

 

வீணை தனை

மீட்டி நின்று

கான மழை

பொழிந்து நின்று

தஸ முகனை

வென்று நின்ற

மா முனியே

நீ வாழிய ! (ஸ)

 

தஸ முகனை

வென்றிடவே

தஸரத சுதனுக்கு

கதிரவன் கவசம்

தந்தருளிய

தவ சிரோன்மணியே

தவத் திருவே

நீ வாழிய !  (ஸ)

 

வஞ்ச மனம்

கொண்டு நின்று

மாங்கனி வடிவிலே

தன்னை தந்த

வாதாபி அசுரனை

மிழுங்கி நின்று

வதைத்து அருளிய

நீ வாழிய (ஸ)

 

எதுகை மோனை

வண்ணமோடு

சந்தமிகு பாடலோடு

உந்தன் புகழ்

பாடி நின்ற சிவ

ராம தாசனுக்கு

அருளிடும் நீவிர்

வாழிய வாழிய ! (ஸ)

 

சிவப் ப்ரிய நாதனே

லோப முத்ர நாதனே

முத்தமிழ் வளர்த்திட்ட

கும்ப முனி நாதனே

சிரம் பணிந்து கவி

புனைந்து பணியும்

சிவ ராம தாசனுக்கருள்

சோதிட சிரோன்மணியே

 

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: