Saturday, May 16, 2020

கொரோனா - தனியா இருக்க கத்துக்கணும்

தனியா இருக்க கத்துக்கணும் இந்த

உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

 

கொரோனா கொட்டத்தைப் பாருங்க

அது  கொல்ற வேகத்தைப் பாருங்க (த)

 

வீட்டை விட்டு வெளியே

வந்தால் நாலும் நடக்கலாம்

அந்த நாலும் தெரிஞ்சி

நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்

 

உன்னைக் கேட்டு

என்னைக் கேட்டு

கொரோனா நடக்குமா

 

அந்தக் கிருமி  படுத்தும்

பாதகத்தை நிறுத்த முடியுமா

 

தனியா இருக்க கத்துக்கணும் இந்த

உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

 

கொரோனா கொட்டத்தைப் பாருங்க

அது  கொல்ற வேகத்தைப் பாருங்க (த)

 

விலகி நின்று பிறரைக்

காக்கும் எண்ணம் வேண்டுமே

 

அந்த எண்ணம் வர

கிருமிக் கூட ஓடி போகுமே

 

தள்ளி நின்று ஒன்று பட்டால்

தொல்லை ஏதுமில்லை

 

இதை புரிந்து கொண்டு வீட்டில்

இருந்தால் பரவ வாய்ப்பில்லை

 

தனியா இருக்க  கத்துக்கணும் இந்த

உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

 

கொரோனா கொட்டத்தைப் பாருங்க

அது  கொல்ற வேகத்தைப் பாருங்க (த)

 

சமூக விலகல் காத்து

நின்று துணை நிற்கலாம்

 

வானில் வந்த  கிருமி

கூட மறைந்து போகலாம்

 

பிரதமர் சொன்ன ஊரடங்கு

பின் பற்றலாம் நாம்

 

அரசு வழியில் நடந்து

சென்றால் வென்று நிற்கலாம்

 

தனியா இருக்க கத்துக்கணும் இந்த

உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

 

கொரோனா கொட்டத்தைப் பாருங்க

அது  கொல்ற வேகத்தைப் பாருங்க (த)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

No comments: