Thursday, May 21, 2020

ஆடித் தபசு


சைவம் வளர்த்திட 
சிவ சங்கரனாய்
வைணவம் தழைத்திட 
அரி நாரணனாய்
பக்தி மார்க்கம் 
தழைத்து ஓங்கிட
பக்தர்க்கு அருள் 
புரிந்து நின்றனரே

அரியும் அரனும் 
ஒன்றென நாம்
அறியும் வகையில் 
இனிது நன்றே
அன்னை உமையவள் தவமிருந்தாள்
ஆடித் திங்களில் 
அருளித் தந்தாள்

சங்கன் பதுமன் 
ஐயம் தீர்த்திடவே
சங்கரனை வேண்டி 
காட்சித் தந்திடவே
சங்கரி தேவி ஊசி
முனை தவமிருந்தாள்
சங்கர நாராயணனை 
அருளித் தந்தனரே

கலியில் கிடைத்த 
நல்ல வரமென்பர்
காணக் கண்கோடி 
வேண்டும் என்பர்
கோமதி அம்பாள் 
அருளித் தந்து நின்ற
கோலமிகு சங்கர 
நாராயணன் தோற்றமே.

நெல்லலை தலத்தில் 
அருளிய கோலமே
எல்லை இல்லா 
பேரானந்தம் தந்திடுமே
இல்லை எனாது அருள் பொழிந்திடுமே
அல்லற் பிறவியும் 
அறுத்து அருளிடுமே !

பாழும் வினைத் 
தீர்த்து கரையேறிடவே
மாலும் அரனும் 
இணைந்த கோலத்தினை
நாளும் பொழுதும் 
சிந்தையில் நினைந்து
தாளைப் பற்றி பணிந்து போற்றுவோமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: