Tuesday, May 19, 2020

புல்லாங்குழல்



ம்ருதுவாய் தீண்டிட
கரத்தில் தவழுவாள்
லாவகவாய் முத்தமிட
சிணுங்கி நிற்பாள்

உதட்டில் கவ்விட
மெல்லிய ஒலி எழுப்பி 
வலிப்பது போல
பாவனை காட்டுவாள்

கரமது விளையாட
நெளிந்து வளைவாள்
சுவாசக் காற்றினில்
இன்னிசை தருவாள்

சிருங்கார ரஸமிகு
வெண்ணிற கோலவள்
கண்ணனுக்கு உவந்த
கோகுல கோபியருடன்

ஆயற் பாடியில் அந்திப்
பொழுதில் கரமேந்திட
ஆவினங்கள் சூழ்ந்திட
அதரத்தில் சுவைத்திட

ஜகத்தினை மயக்கிமன
மோகத்தில் ஆழ்த்துவாள்(ன்)
கண்ணனும் இவளால்
நாமம் பல கொண்டான்

வேணு கோபால முரளி
தரன் என நாமம் கொண்டான்
அவளது நாமமோ வெண்குழலே
ஊதும் புல்லாங்குழலே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: