Saturday, May 16, 2020

முயற்சி

தொலை வானம்

தொடும் தூரம்

தொட முனையுமென

நீ நினைந்தால் !

 

தொடும் பூமி

தொலை தூரம்

தொட முனையாதென

நீ நினைந்தால் !

 

தடைக் கல்லே

படிக்கல்லே

விழும் புண்ணே

விழுப்புணனே

 

தளர்வடைந்தால்

தலை தடுமாறலாம்

தலை நிமிர்ந்தால்

தடை தாண்டலாம்

 

உலகு உன் கையில்

உன் மனம் நினைந்தால்

உலகின் மூலையில் நீ

உன் மனம் முடிந்தால் !

 

முயன்றால் முடியாதது

வையத்தில் ஏதும் இல்லை

முடியாதென முடங்கினால்

வெல்ல ஏதும் இல்லை

 

முயற்சியே திரு

வினையாக்கும்

திருவருளையேத்

தனதாக்கும் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


 

 


No comments: