பாரதப் போரினில்
உதித்த கீதமே
பார்த்தனுக்கு அருளிய
இனிய கீதமே
பகவான் பகர்ந்த
கீதம் இன்றே
பாரதத்தின் புண்ணிய
கீதம் இதுவே
நவ இரு யோகம்
கொண்டது இதுவே
நவ ரத்தின பூஷண
கீதம் இதுவே
கர்ம யோகம்
பக்தி யோகம்
ஞான யோகம்
மொழிந்திடும் கீதமே
கௌந்தேயன் வேதனை
விலக்கும் விஷாத யோகம்
கோட்பாடுகள் உரைத்திடும்
சாங்கிய யோகம்
செயல் அறம் செப்பிடும்
கர்ம யோகம்
அறிவறம் உரைத்திடும் ஞான
கர்ம சந்யாஸ யோகம்
துறவின் அறம் கூறிடும்
சந்யாஸ யோகம்
தன்னடக்கம் அறம் செப்பிடும்
தியான யோகம்
பகுத்தறிவு அறம் விளக்கும்
ஞான விஞ்ஞான யோகம்
பரம்பொருளின் அர்ப்பணமாய்
அக்ஷர பிரம்ம யோகம்
அறிவு பெரும்புதிரின் அறமாய்
ராஜா வித்யா ராஜ குஹ்ய யோகம்
தெய்வீக மாட்சிமை அறமாய்
விபூதி விஸ்தார யோகம்
அண்டப் பெரு வடிவுக் காட்சியாய்
விஸ்வரூப தரிசன யோகம்
நம்பிக்கையறம் செப்பிடும்
பாகவத பக்தி யோகம்
பொருள் ஆத்ம பிரிவினை அறமாய்
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
குணப் பிரிவினை அறமாய்
குணத்ரய விபாக யோகம்
பரம நிலை அடையும் அறமாய்
புருஷோத்தம யோகம்
தெய்வ அசுரத் தன்மை செப்பும்
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
மூவித நம்பிக்கை அறமாய்
சிரத்தாதர்ய விபாக யோகம்
விடுதலை துறவின் அறமாய்
மோக்ஷ சந்நியாச யோகம்
மானுடர் வாழ்வு உய்க்க உரைத்து
பாதை காட்டிடும் கீதை
பகவான் கிருஷ்ணர் அருளிய ஸ்ரீமத்
பகவத் கீதை போற்றி போற்றி
சந்தர் சோமயாஜிலு
No comments:
Post a Comment