Friday, May 15, 2020

வெண்ணிலவே


வான் உலகு உலவுகின்ற

தண்ணொளி வெண்ணிலவே

வண்ண மய பூத்தவொரு

பொலிவுடை எழில் நிலவே (வா)

 

உந்தன் வண்ண அழகில் மயங்கா

மாந்தர் எவரும் உளரோ

உந்தன் அழகை போற்றி புகழா

புலவர் எவரும் உளரோ


கன்னியரின் அழகைப் புகழ

உன்னை துணை சேர்பரே

அன்னையர்கள் சேய்மார்க்கு

உன்னைக் காட்டி அமுதூட்டுவர் (வா)

    

உமையும் உமையொரு பாகனும்

உனை சிரசில் சூடி உவந்தனர்

தரணி ஆண்ட இராமனும் உந்தன்

பெயரை சேர்த்து நின்றான்


நவ கோளில் உன்னை ஒன்றாக்கி

இந்திரனும் அழகு பார்த்தான்

நானும் மட்டும் விதி விலக்கல்ல

உனை பாடாது நின்றிருக்க (வா)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: