வான் முகிலோடு
விளையாடும் நிலவே வா
வெண்ணிலவே நீ... வா (வா)
ஆகாய கங்கை தனில்
நீ நீராடி வந்தனையோ
அத்துனை அழகுடனே
எழிலாய் நின்றாய்
விண்ணில் தண்ணொளி வீச
குளுமையுடன் நின்றாய்
மண்ணில் மாந்தர் வியக்க
பொலிவினை தந்தாய் (வா)
வானிலே நட்சத்திரங்கள்
உடன் இல்லாத போது
தனிமையில் எங்கனம் நீ
உலவி வருவாய்
புவிக்கு வருகை தந்து எம்முடன்
குலாவி செல்வாய்
புத்துணர்ச்சி கொண்டு நீ
களிப்பினை கொள்வாய் (வா)
நீலக் கடலின் பொங்கும் ஓசை
தனைக் கேட்டுச் செல்வாய்
உனது எழில் முகத்தின் பிம்பம்
தனைக் கண்டு கொள்வாய்
பாய்ந்து வரும் அலையில் உன்
காலினை நனைத்து செல்வாய்
பேருவகையும் பரவசமும் எமக்கு
தந்து செல்வாய் எழிலாய் (வா)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment