Friday, May 15, 2020

கொரோனா தனிமை ஒன்றே வழி


தனிமை ஒன்றே

வழி என்று

நன்றே அறிவாய்

நீ இன்று (த)

 

தரணியில் தவிக்கும்

தவிப்பினைக்கண்ட

பின்னும் பயமில்லையோ

 

தடுப்பாற்றல் ஒன்றே

வழி என்று அறிந்திடு

விழித்திடு தனித்திரு (த)

 

மருந்து கண்டறியா

நிலை இன்று

மறைந்து வாழுதலே

நன்று இன்று

 

மனிதனை தொட

இயலா நிலை கண்டு

மடிந்து மறையும்

கிருமி அறவே (த)

 

உயிர் பறித்திடும்

கொடிய கொரோனா

பரவும் கிருமி

தடுத்து நிறுத்திட

 

உனை தனிமை

படுத்தி நின்று

பரவல் சங்கிலி

உடைத்து வென்றிடு

 

வரும் முன் தடுப்பது

மாந்தர் நமக்கு நன்று

வந்த பின் இழப்பது

மாந்தர் நம் மடமை (த)

 

நம் நாட்டின் நலன் கருதி

நம் உடல் நலன் கருதி

நம் உயிர் காக்க எண்ணி

நம் அரசு நயமுடன் கூறும் (த)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: