Friday, May 15, 2020

இசைக்கு இணையுண்டோ





இசைக்கு இணையுண்டோ

இறை தெய்வம் களித்திடும்

இசைக்கு இணையுண்டோ என்

இனிய சகியே சகியே (இ)

 

வெண் குழல்

இசையினில் அவனியை

மயக்குவான் வேணு

கோபாலன்


மரகத வீணையில்

இசை தருவாள்

நான்முகன் ப்ரிய

கலை வாணி (இ)

 

தமருகம் ஏந்துவான்  

அர சிவனே

மத்தளம் கொட்டுவார்

நந்தி தேவனே


மகத வீணை மீட்டுவார்

நாரத முனியே

தம்பூரா மீட்டுவார்

தும்புரு நாதனே (இ)

 

வீணையேந்தும்

பார்வதி மாதங்கி தேவி

வீணையேந்தும்

பார்கவி வீணா லக்குமி


தாளம் போதுவார்

நான்முக பிரம்மனே

போற்றி நின்றேன்

சிவ ராம தாஸனே (இ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 

 

 


No comments: