பின்னலின் மகிமை நீ
அறிவாய் பெண்ணே
பின்னிடும் உறவு
காட்டும் பின்னிய (பி)
மங்கல நிலை காட்டும்
சுமங்கலி பெண்ணின்
மங்கள கரமான ஒரு
பின்னல் அன்றோ
உறவினைக் காட்டுவது
பின்னிய பின்னலன்றோ
பெண்ணின் பின்னாலே
ஆடும் ஊஞ்சலன்றோ (பி)
விரித்த தலைவிரி கோலம்
அமங்கலக் கோலமே
பின்னலை விடுத்து பிணம்
முன் நிற்கும் கோலமே
என்னவரே கை விட்ட பின்
எனக்கேது உறவென
பின்னிய கோலம் விடுத்து
உரைத்திடும் கோலமன்றோ (பி)
திரிவேணி சங்கமமாய்
மூன்று பின்னலமைப்பாய்
கங்கை புண்ய நதியாய்
பிறந்த வீடு வலமாய்
யமுனா புண்ய நதியாய்
புகுந்த வீடு இடமாய்
ஸரஸ்வதி நதி போல
தன்னை மறைத்தே
இரு வீட்டாரரையும்
இணையுறச் செய்யும்
எழிலொரு வாழ்வே குலப்
பெண்ணின் பெருமை (பி)
நேர் வகிடு பின்னல் தனிலே
லட்சுமி வாசம் புரிவாளே
மங்களம் பல தந்து நின்று
நல்வாழ்வு நல்குவாளே
பின்னும் பின்னல் வெறும்
அலங்காரமல்ல பெண்ணே
பெண்ணின் வாழ்வின்
உயர்ந்த தத்துவமே (பி)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாசன்

No comments:
Post a Comment