உடைத்திடுவோம்
கொரோனா
பரவல் சங்கிலித்
தொடரை (உ)
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
நாளும் உலவும்
முது மொழி
தனித்து இருந்தால்
கோடி நன்மை
நிகழ் காலம்
விரும்பும் நன் மொழி
பாரில் நிலவும்
அவலம் காணீர்
கொரோனா தாரும்
அல்லல் காணீர்
ஊர் உலாவும்
உல்லாசம் கெடுதி
ஊர் அடங்கு
நிலைமை நலமே (உ)
அதி விரைவில்
பரவும் கொரோனா
பீதி தந்தது நுண்
கிருமி வடிவில்
விதியோ சதியோ
பரவி நிற்பதை
மதி நுட்பால்
பரவலைத் தடுப்போம்
ஏழும் ஏழும்
தினங்கள் வாழ்ந்திடும்
ஏழரை நாட்டு
வகை சர்ந்தததோ
ஏழும் ஏழும்
தினங்கள் தனிமையிலே
ஏழிரு நாட்கள் பல
பரவல் தடுப்போம் (உ)
இன்றைய தனிமை
நாளைய இனிமை
அறிந்து நின்றால்
கோடி நன்மை
இன்னல் அல்லல்
கண்ட இத்தாலி
துயரைக் காட்டும்
தூரத்து உண்மை
கரம் குலுக்கி
வாழும் நேரமல்ல
கரம் விலக்கி
நிற்கும் தருணமே
கரம் சிரம் நாசி
கண் கழுவி
சுத்தம் காண்போம்
நித்தம் நித்தம் (உ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment