அழகு எதுவோ
அழகுக்கு அழகு
சேர்க்கும்
அழகு எதுவோ?
அலை பாயும்
கடல் அழகு
முகில் உலவும்
வான் அழகு
சிலை வடித்த
கருங்கல் அழகு
அன்றமலர்ந்த
தாமரை அழகு
அதிகாலை உதய
பரிதி அழகு
அன்பு பொழியும்
மாந்தர் அழகு
முதுமையில் துறத்தா
தனயன் அழகு
மாலையில் வீசும்
தென்றல் அழகு
பருவத்தே பொழியும்
மழை அழகு
பருவ மங்கையின்
வடிவு அழகு
குழந்தைப் பருவ
சேட்டிதம் அழகு
கள்ளமில்லா ஒலிக்கும்
சிரிப்பு அழகு
அன்னையின் அன்பும் மழலையின் சிரிப்பும்
பூரண வெண்ணிலவும் செந்தமிழ் மொழியும்
அழகோ அழகு
அழகுக்கு நிகருண்டோ
அழகுக்கும் அழகு
சேர்ப்பது இவையன்றோ.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment