Tuesday, May 19, 2020

பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் எனும்  
    திருநாளில்
மங்கல நன்னாள்   
    இந்நாளில்
பொங்கல் பொங்கி 
    பொங்கட்டும்
மங்களம் சேர்ந்து 
    பொங்கட்டும்

வங்கக் கடல்
    அலைப் போலவே
பொங்கட்டும் 
    மங்களமெங்குமே
பொங்கிய மங்களம் 
    என்றென்றும்
தங்கட்டும் இல்லம்  
    எங்கெங்குமே

எங்கெங்கும் ஒளி   
    வீசும் எழிலொரு
குங்கும வண்ணக் 
    கதிரொளிச் சுடர்
அங்கிங்கு 
    எனாதபடியே
சிங்காரவொளி 
    பரந்து வீசட்டும்

மங்கல பசு 
    கன்று மாடுகள்
மங்கல மணி 
    ஓசை ஒலியுடன்
சங்கத் தமிழ் மரபு 
    பெருமை யாவும்
ஓங்கி பரவட்டும் 
    வையமெங்கும்

நீங்கட்டும் நோய் 
    நொடி யாவும்
மங்கட்டும் எதிர்   
    மறை நிலை யாவும்
தீங்கெல்லாம் நொடியில் 
    ஒழியட்டும்
பங்கய மலர் போற் 
    வாழ்வு மலரட்டும்

ஓங்கட்டும் உழவுத் 
    தொழில் யாவும்
ஓங்கட்டும் குறளும் 
    ஜல்லிக்கட்டும்
திங்கள் தை முதலாம் 
    தினமின்று
திங்களின் பொலிவாய் 
    துவங்கட்டும்

ஐங்கரனின் துணை 
    என்றும் கிட்டட்டும்
திங்களைச் சூடிய 
    சங்கரன் துணை
சங்கரி அருள் மழை 
    பொழியட்டும்
சங்கராந்தியில் 
    நல்லன துவங்கட்டும்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: