Friday, May 15, 2020

வானவில்



சிந்தூர சிவப்பு

எழுது மை நீலம்

கிளியின் பச்சை

மங்கள மஞ்சள்

கத்திரி ஊதா  

தித்திக்கும் ஆரஞ்சு

கரு நீலம் கலந்த

கலவையாய்

 

வண்ண மயமான

வடிவு தனிலே

வண்ண மழைத்

துளியின் எதிரொலியாய்

வண்ண ஏழு

நிறங்கள் உடனே

வண்ணக் காட்சி

தருது இங்கே

 

மந்திர மாயப்

புன்னகை தானோ

சந்திரப் பொலிவுனும்

மின்னிடும் அழகோ

இந்திரன் அனுப்பிய

தனுசு இதுவோ

வந்திறங்கியது

நீல வானத்திலே

 

கண்ணுக்கு இனிய

காட்சி தனை

மண்ணுலகு மாந்தர்

கண்டு களித்தட

விண்ணுலகு தாண்டி

வந்த வில்தனை

மண்ணுலகில் கணை 

தொடுப்பார் யாரோ?


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: