Friday, May 15, 2020

காதல் காலம்


வசந்த கால நேரத்திலே

     தென்றலாய் தீண்டி சென்றிட்ட

கார்கால மாத நேரத்திலே

     சாரலாய் நனைத்து சென்றிட்ட

 

ஐப்பசி மாத காலத்திலே

         மத்தாப்பாய் சிரித்து சென்றிட்ட

கார்த்திகை மாத காலத்திலே

         தீப ஒளியாய் திகழ்ந்திட்ட

 

மார்கழி மாத காலத்திலே

         பனி மேக மூட்டமாய் வந்திட்ட

அதிகாலை கால நேரத்திலே

         கதிரவனாய் தோன்றி ஜொலிதிட்ட

 

காரிருள் கால வானத்திலே

         நிலவாய் வந்த தேவதையே

தை மாத பொன் நேரத்திலே

         மாலை இட வருவாயா?


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: