Saturday, May 16, 2020

காதல் காற்று தூது

காற்றே ! பூங்காற்றே !

காதல் மலர்

ஒன்று தாரேன்


என் காதலியிடம்

தருவாயே சம்மதம்

கேட்டு சொல்வாயே !

 

வசந்த காலம் 

வருகையிலே தென்றலாய் 

அங்கு செல்வாயே


வாசமிகு என் 

பூந்தோட்டதின் பூவின் 

வாசம் கொண்டு செல்வாயே

 

அந்தி மயங்கும்

நல் வேளையிலே

அணங்கை அவளைக்

காண்பாயே

 

அந்தியில் நிலவு

உலவுகையிலே அன்ன

நடையில் வரச் சொல்வாயே

 

கோடை வாடை

வீசும் பொழுது

கொடையைக் கொண்டு

செல்வாயே

 

கோடை மழையில் நனையாது

கொடியிடையாளைக்

கூட்டி வருவாயே

 

காரிருள் பூத்திடும்

பொழுதினிலே கண் கவர்

நட்சத்திரம் காட்டுவாயே

 

காதல் மொழியை

நீ மொழிவாயே

காதோரம் கவி

மழை பொழிவாயே

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: