Friday, May 15, 2020

மூடன் கவிஞன் ஆக இயலுமோ


அடி மூடன் கவிஞன்

ஆக இயலுமோ

அவனி தனில் புகழ்

காண இயலுமோ (அ)

 

நீல வானில் உலவும்

அந்தமிகு சந்திரமதி

புவி தனில் கண்ணெதிர்

தேவதையாய் தோன்றி

நின்றால் அடி மூடனும் சந்தமிகு

எதுகை மோனையுடன்

எழில் கவிதை சாகரம்

புனைந்து நிற்பானே (அ)

 

கன்னித் தமிழில் எழில்

கன்னி தேவதையை

முக்கனியுடன் செந்தேன்

கலந்த சுவையினும்

மிகுந்த அருட்சுவைப்

பாடல் புனைந்து

கன்னி மனம் கவர்ந்த

காவியக் கவிஞனாவா...ன் (அ)

 

கடலைக் கடந்து இலங்கை

எரித்த சுந்தர காண்ட

இராம காவியம் தந்த

கம்ப நாட்டாரும்ம்ம்ம்ம்......

சிலம்பு ஒடித்து மதுரை

எரித்த காப்பிய

சிலப்பதிகாரம் தந்த

இளங்கோவடிகளும்ம்ம்ம்ம்

 

இரட்டை சிலேடையில்

புனைந்து நின்ற

காளமேகப் புலவரும்ம்ம்ம்ம்

எந்தன் முன்னே வந்து

நின்று கவிப் பாடல் பாடம்

கற்க தவம் புரிந்து வேண்டி

நின்றால் புகழ் யாவும் எழில்

தேவதை உனக்கன்றோ (அ)

 

உவமை உவமேயம் மிஞ்சும்

இலக்கணமே அஞ்சும்

வார்த்தைகளுக்கு பஞ்சம்

இசையமைத்திட கெஞ்சும்

எனை அடைவரே தஞ்சம்

களித்தாடும் நெஞ்சம்

சலங்கைகள் கொஞ்சும்

ஆடிடவே கொஞ்சம் (அ)



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: