Friday, May 15, 2020

கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைதல்


கல்லூரி படிப்பில் முதலாம்

இடத்தில் நின்றவள்

நல்ல மகிழ்வான குடும்பத்

தலைவியாய் மாறி இருந்தாள்

கடைசி வரிசையில் கொட்டம்

போட்டு திரிந்தவன்

நல்லதொரு மதிக்கத்தக்க

தொழிலதிபராய் மாறியிருந்தான்

 

அமைதியான அப்பாவியாய்

அடக்கத்துடன் இருந்தவன்

அசகாயசூர வழக்கறிஞராய்

அரட்டை அடித்துக்கொண்டிருந்தான்

எதற்குமே இலாயக்கில்லை

என புறக்கணிக்கப்பட்டவன்

பக்கம் பக்கமாய் எழுதுகின்ற

கதாசிரியனாய் திகழ்ந்தான்

 

கணித பாடத்தில் தேறாதவன்

உடையலங்கார நிபுனரானான்

வகுப்பறைக்கு வெளியே நின்றவன்

மதிப்பிற்குரிய இராணுவ தளபதி

பழைய கல்லூரி மாணவர்கள்

ஒன்றிணைதல் கற்று தருவது

யாதெனில் ஒருவரை பள்ளிப் பருவ

வாழவில் நிர்ணயம் காண இயலாது

 

புதிய பதிப்பு புத்தகத்தின் அட்டை

வைத்து நிர்ணயிக்க இயலாது

கடும் உழைப்பும் அதீத ஈடுபாடும்

வெற்றியாளனைக் காட்டுகிறது

வெவ்வேறு துறையில் வெற்றிப்

படிக்கட்டுககளை காட்டுகிறது

முயற்சியும் முனைப்பும் ஒருவனுக்கு

முன்னேற்றம் தருகிறது.....



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: