Tuesday, May 19, 2020

தமிழ் நாடு வங்கப் புயல் சேதம்





சங்கத் தமிழ் வளர்த்த 
தங்கத் தமிழ்நாடு இங்கே
வங்கப் புயல் தனிலே
மங்கிப் போனது இங்கே
கங்கை நதி போலே
எங்கினும் வெள்ளம் இங்கே
தங்கும் குடில் யாவும்
தண்ணீரில் மிதக்குது இங்கே

தன்னிகரா நிலை வேண்டி
தன்னிறைவு பெற்றிடவே
தண்ணீரை இரைந்தோமே
தண்ணீரில் மிதந்தோமே
திண்ணயில் அமர்ந்த வண்ணம்
தண்ணீர் நிலை ஆராய்ந்தோம்
திண்ணையே மூழ்குமளவு
தண்ணீரும் நிறைந்தது இப்போ

சாலைகள் ஒவ்வொன்றும்
கால்வாயாய் மாறியதிங்கே
கரிகாலன் கட்டிய பல
கால்வாயும் தோற்றதிங்கே
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் சல்லடை சாலையடி
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் குட்டைகள் தோன்றியதடி

என்று தணியும் இந்த 
புயலின் வேகம்
என்று மறையும் இந்த 
மழை தரும் மேகம்
என்று வடியும் இந்த 
மழை நீர் தேக்கம்
என்று முடியும் இந்த 
மானுடர் ஏக்கம்

சாலை தனை மேம்படுத்தி
பாலம் பல கட்டி வைத்தால்
மழை தனை சேமித்து
நீர் நீக்கம் அமைத்து விட்டால்
வழி நெடுக மரம் வைத்து
எழிலொரு வழி செய்தால்
சிங்காரச் சென்னை இங்கே
செந்தமிழ்நாடு பெற்றிடுமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: