Monday, May 25, 2020

பேசும் மரம்

 

 














சிறு விதையென
தூர எறிந்திடினும்
புவியில் ஆழ ஆழ
புதைந்து போயிடினும்

விதையில் உதித்து
வேரூன்றி வளர்ந்து
செடியாகி கொடியாகி
நெடு மரமாகி நின்றேன்

பச்சை இலை துளிர்த்து
வெள்ளைப் பூ பூத்து
காயாகிக் கனிந்து நான் சுவைக் கனி தந்தேன்

அடர்ந்து மலர்ந்து நின்று
படர்ந்து விரிந்து நின்றேன்
கண்ணுக்கினிய விருந்து 
படைத்து குளுமை தந்தேன்

சுடரொளி கதிர் வீசும்
ஞாயிறு கதிர் தடுத்து
வெம்மை தணித்து நின்று
குளுமை நிழல் தந்தேன்

தென்றல் வீசும் பொழுதே
மெல்ல ஆடி நின்றேன்
மழைச் சாரல் பொழியவே
ஒதுங்க இடம் தந்தேன்

விதை வீழ்ந்து போயிடினும்
விருட்சமாய் வளர்ந்த நான்
விஸ்வரூபமாய் ஓங்கி நான்
வேண்டும் நிழல் தந்தேன்

மடிந்த பின் எந்தன் உடல் 
யாவும் உந்தன் அடுப்பங் கரையில் நெருப்பு தார 
வந்து உதவுவேன் கண்ணா

இன்னா செய்தாரை ஒருத்தல் 
எனும் குறள் மொழிக்கேற்ப
இனியன யாவும் தந்தேன் மரம் 
எனும் நாமம் கொண்டேன்.


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: