Friday, May 15, 2020

நரம்பு சுண்டி இழுத்தல்


உடலைப் பேணி

காத்துக் கொள் கண்ணே

உடல் நலமே நம்

வாழ்வாதாரம் (உ)

 

நரம்புகள் சுண்டி

இழுப்பது எதனாலே

நலம் குறைபாடு

தருவது எதனாலே

 

உடல் நீர் சத்து குறைபாடும்

ஒரு காரணமே

மோட்டார் நரம்பு பலவீனமும்

ஒரு காரணமே

 

அபான வாய் மன அழுத்தம்

குறைபாடும் காரணமே

உப்பு கலந்த வெந்நீர்

ஒத்தடம் குணம் தருமே (உ)

 

பச்சை கற்பூரம் தேங்காய்

எண்ணெய் சூட்டு

ஒத்தடம் தந்தாலும்

குணம் நல்குமே

 

குளிர் சாதன மற்றும்

கிழங்கு உணவு

வகைகள் தவிர்த்திடல்

வேண்டும் கண்ணே

 

முளைக் கட்டிய தான்யம்

பச்சைப் பயறு

தேனுடன் கலந்த கனிகள்

உண்ண பயன் தாருமே

 

வாழைப்பழம் ஆரஞ்சு

உண்ண பயன் தாருமே

அதிக பளு தூக்குதல்

தவிர்த்திடல் நலமே (உ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 


No comments: