Friday, May 15, 2020

உத்தம காந்தி ஜெயந்தி

  

தாத்தா காந்தி வாழிய !

உத்தம காந்தி வாழிய !

சுத்த சுதந்திர காற்று தந்த

உத்தம காந்தி வாழிய !

 

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று செய்தனை

புத்தி கொண்டு யுத்தி செய்து

வித்தை ஒன்று செய்தனை

 

குத்து கொலை எதிர்த்து நின்று

கொத்தடிமை தகர்த்து நின்ற

கைத்தடி கொண்டு நடந்து நின்ற

உத்தம காந்தி நீவிர் வாழிய !

 

எத்துணை துயர் பல வரினும்

தத்தமது உயிரை துச்சமென

சொத்து சுகம் துறந்து நின்று

ஒத்துழையாமை புரிந்து நின்று

 

சுத்தம் சுகாதாரம் அறிவுறுத்தி

நித்தமது போராடி பங்கயர்

சித்தம் கலங்கி ஓடச் செய்த

உத்தம காந்தி நீவிர் வாழிய !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 

 

 


No comments: