Friday, May 15, 2020

ஆத்யா தோட்டத்தில் அழகிய பூவே


பத்ரா இல்லத்து

பசுமை தோட்டத்து

தளிர் கரம் தொட்ட

துளிர் பூவே

 

மலர் விழி காணும்

பூ மலரே

மங்கை குழல் சூடும்

மஞ்சள் மலரே

 

சிந்தூர வண்ணத்து

சிவப்பு ரோஜாவே

வெண்டாமரை கரத்தில்

வெண் மலரே

 

தூவானத்து மழை தந்த

தூது வளைப் பூவே

ஆத்யா தோட்டத்தில்

அழகிய பூவே


களித்திட பூத்த

கத்திரிப் பூவே

ஆத்யா கருங்குழலில்

குடியேற வா

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: