Tuesday, May 19, 2020

சொர்க்க வாசல்




வாரீர் வாரீர் 
சொர்க்க வாசல் 
காண வாரீர் 

வைகுந்தன் அருளிடும்
சொர்க்க வாசல் 
காண வாரீர்  (வா)

மார்கழி திங்கள் 
ஆறைந்து திதியாம் 
ஏகாதசி திதியில்

திவ்ய தரிசனம் 
தந்திடும் சொர்க்க 
வாசல் காண வாரீர் 

அடியார் ஆழ்வார்கள் 
போற்றிடும் திருமகள் 
உறை மார்பன் பரம 

பதம் தந்தருளும் 
சொர்க்க வாசல் 
காண வாரீர் (வா)

நான்மறை கோஷம் 
விண்ணைப் பிளந்திட பல்லாயிரத்து ஆண்டு 
நயமுடன் ஒலித்திட  

நாலாயிரப் பிரபந்தம் 
அந்தணர் மொழிந்திட
வெள்ளி எக்காளம் 
எழிலாய் முழங்கிட 

சிவ ராம  தாஸன் 
பணிந்து அழைத்திட 
நானிலம் உய்த்திட  
நாரணன் அருளிட   (வா)


சந்தர் சோமயாஜிலு (@)
      சிவ ராம தாஸன்

No comments: