Friday, May 15, 2020

பாமாலை 2


என் சிந்தையில்

உறைந்து நின்று

எண்ணோட்டத்தில்

கலந்து நின்று


செந்தமிழ் எழுத்துக்களில்

கோர்த்து நின்று

சொல்லிலே புகுந்து

நின்று அருளி


வாக்காய் மாறி நின்று

கவிதை உருவாகி

எதுகை மோனை

சந்தம் உடனே


வெண்பா பாடலாகி

பாமாலை சூடி நின்று

வசந்தமிகு பூமாலையுடன்

செந்தேன் சிந்தும்


பூமாலை சாற்றி நின்ற

பூங்கோதையே

முத்தமிழும் நீ யாகும்

கருவியாய் எனையாக்கி


விளையாடல் புரிந்திடும்

விமலையே பாதியே

அடியேன் சிவ ராம

தாஸன் விழைகின்றேன்


என் சென்னி மீதென் உன்

மலர் பாதம் பதிவாயே

என் சென்னி மீதென் உன்

மலர் பாதம் பதிவாயே

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: