Saturday, May 16, 2020

உள்ளே வெளியே - கொரோனா


உள்ளே வெளியே

             விளையாட்டு இது

ஆனால் சீட்டுக் கட்டு

             விளையாட்டல்ல

மாய மங்காத்தா

             விளையாட்டு ஆனா

ராஜா ராணி ஜாக்கி

             இதிலே இல்லை (உ)

 

கண்ணைக் கட்டும்

             விளையாட்டு இது

கண்ணா மூச்சி

             விளையாட்டு இது

கண்ணுக்குத் தெரியா

             கொரோனா ஆடும்

கொடூரமான கொலை

             ஆட்டம் இது (உ)

 

நீயும் நானும்

             உள்ளே இருந்தால்

கொரோனா கம்ம்னு

             வெளியே இருக்கும்

நீயும் நானும்

             வெளியே வந்தா

தொற்று நோயாய்

             கொன்னு போடும் (உ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: