நன்றி நவில்வோம் நாம்
நன்றி பல நவில்வோம்
இரு கரம் குவித்து சிரம்
தாழ்த்தி போற்றிடுவோம் (ந)
இமை இமைக்காது கண்
துஞ்சாது தன்னலமிலா
வெள்ளைச் சீருடையணி
மருத்துவர் குழாமுக்கும்
காக்கிச் சீருடையணி
காவலர் குழாமுக்கும்
வெள்ளைச் சீருடையணி
செவிலியர் குழாமுக்கும்
வண்ணச் சீருடையணி
தூய்மை பணியாளர்க்கும்
பின் புலமாக இயங்கும்
அரசு ஊழியர்களுக்கும்
தன்னலமற்ற தன்னார்வு
தொண்டர்களுக்கும்
நல் வழி காட்டும் பிரதமர்
மற்றும் முதல்வருக்கும்
நானிலம் மாந்தர் தம்
உயிரைக் காத்திட
கொரோனா கொட்டமதை
எதிர்த்து அனுதினமும்
போராடி தொண்டு சேவை
புரியும் இவர்களுக்கு
நலமுடன் வாழ வேண்டுவோம்
நன்றி பல நவில்வோம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment