Saturday, May 16, 2020

கொரோனா


கொரானோ வைரஸ் 

யாதென அறிவாய் 

ஆட்கொல்லி அபாய 

நுண்ணுயிர் கிருமி அதுவே


சீமை சீன தேசத்தில் 

உதித்த அபாயம் இதுவே

விடை ஏதும் காணா  

கொல்லிக் கிருமி இதுவே

 

ஆறிரண்டு மணித்துளி 

வாழ்வு கொண்டிடும்

அபாயம் நிறைந்ததொரு 

கிருமி இதுவன்றோ


கூட்டம் மிகு நிறை 

இடம் தனை தவிர்ப்போம்  

நிலமை அறிந்து நின்று 

புத்தியுடன் நடப்போம்

 

கரம் சிரம் முகம் தனை 

வழலை நீரால் கழுவி

சுத்தமாய் பத்திரமாய் 

கவனமாய்  இருப்போம்


அரசு ஊரடங்கு சமூக 

விலகல் காத்து  நின்று 

சுயக் கட்டுப்பாட்டுடன் 

வெற்றிக் கண்டிடுவோம்


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


          


No comments: