Wednesday, May 20, 2020

கனா கண்டாள் ஆண்டாள்


கனா கண்டாள் காரிகை
கண்ணன் கரம் பற்ற.... (க)

பூ மகள் மடியிலுதித்த
பூங்குழலாள் பூவையே
பூ மாலை தனை தொடுத்து 
பூ சூடி நின்ற பாவையே (க)

பாவை அகவையோ ஒர் ஐந்து
பாவை தொடுத்ததோஆறைந்து
கோவை நினைந்து தொடுத்த
கோர்வை நிறைந்த பாமாலை (க)

நாரணன் புகழ் பாடி ஜகத்
காரணனை நினைந்துருகி
வாரணம் ஆயிரம் தந்து
பூரணன் கரம் பிடிக்க (க)

ஆண்டவனை நெஞ்சில் ஆண்டு
ஆண்டவனை பற்றி நின்றாள்
ஆண்டில் மாதம் மார்கழியில்
ஆண்டவனை காட்டிய ஆண்டாள் (க)

பாதை காட்டிய கண்ணனின்
பாதம்  காட்டி அருளிய 
கோதையின் திருப்பாவை பாடி
சிவ ராம தாஸன் பணிந்தேனே (க)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: