நாடு தாங்குமோ
மனிதா நாடு
தாங்குமோ கொரானோ
சுனாமியானால் (நா)
மக்கட்தொகை குறைவான
வல்லரசு நாடுகளே
எதிர் கொள்ளாது
தடுமாறும் போது
மக்கட் தொகை நிறைவான
இந்தியா எதிர்
கொள்வது எப்படி மனிதா
தனிமை கொள்வதாலே (நா)
நாட்டின் எல்லையில்
நம்மை பாதுகாக்க
வாழ் நாள் முழுவதும்
காத்து நிற்கையில்
தன்னுயிர் துச்சமென
அல்லும் பகலும்
மருத்துவர் செவிலியர்
காத்து நிற்கையில்
நம்மை நாமே பாதுகாக்க
ஏழிரு தினங்கள்
வீட்டில் முடங்க தயக்கம்
ஏனோ ஏனோ
கேளிக்கை விருந்தும்
போதும் போதும்
தனிமை ஒன்றே நற்கதி
என அறிவாய் (நா)
ஒன்று இரண்டாகி
இரண்டு நூறாகி
நூறு ஆயிரமாகி
ஆயிரம் இலட்சமாகி
இலட்சம் கோடியாகி
சுனாமி அலையாய்
கொடிய கொரோனா
தாக்கும் பொழுது (நா)
இத்தாலி கண்டதொரு
துயரைக் காண்பாய்
நிமிடத்திற்கு ஒன்றுவென
உயிரை எடுத்திடும்
கொத்து கொத்தாய் விழும்
சவத்தைக் கண்டு
பாடம் கற்போம் வீட்டில்
தனிமை காண்போம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment