Friday, May 15, 2020

தோல்வியும் ஒரு வெற்றி தான் !


தோல்வியும் ஒரு

வெற்றி தான் !

ஆதலால் நீ....

தோற்று போ !  (தோ)

 

சேயிடம் தோற்றுப்

போனால்

சேயின் மழலையில்

வெற்றி காண் !

 

தனயனிடம் தோற்றுப்

போனால்

தனயன் சிரிப்பில்

வெற்றி காண் !

 

தந்தையிடம் தோற்றுப்

போனால்

தந்தையின் அனுபவத்தில்

வெற்றி காண் !

 

தாயிடம் தோற்றுப்

போனால்

தாயின் பாசத்தில்

வெற்றி காண் !

 

தாரத்திடம் தோற்றுப்

போனால்

தாரத்தின் அன்பில்

வெற்றி காண் !

 

தோழனிடம் தோற்றுப்

போனால்

தோழன் நட்பினில்

வெற்றி காண் !

 

காதலியிடம் தோற்றுப்

போனால்

காதலியின் முத்தத்தில்

வெற்றி காண் !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: