Wednesday, May 20, 2020

விதியினை மதி வெல்லுமோ




விதியினை மதி
வெல்லுமோ வல்
விதியினை மதி
வெல்லுமோ (வி)

வாய் மொழியால்
செய் வினையாவும்
வாய் மொழியால்
பெற்று கழியுமே

செய் செயலால்
செய் வினையாவும்
செய் செயலாய் பின்
வந்து கழியுமே

மனதினால் தோன்றும்
செய் வினையாவும்
கனவினில் தோன்றி
பின் கழியுமே

நல் வல் வினை
இரண்டும் கழிந்த 
பின்னே முத்தி கிட்டிடும்
இறை அருளாலே (வி)

மத்தென கொண்டு
கடையும் தயிரிலே
மறைந்திடும் வெண்ணை
வருவது போலெ

மறைந்திடும் வலியது
விதி கரையும் பொழுதே
இறையவன் குரு 
வடிவாய் வந்தருளி

வாய்மொழி பார்வை
ஸ்பரிச முறையிலே
விதியினைக் கரைத்து
முத்தி தருவரே

அல்லற்தனை விடுத்து
நல்லறம் புரி மனமே
வல்லவன் இறையவன்
நல்லருள் புரிவரே (வி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: