Friday, May 15, 2020

இல்லறத்தான் கடன்

இல்லறத்தான் கொண்ட

கடன் எத்துனையோ

இல்லறத்தான் கொண்ட

கடன் ஆறைந்தே (இ)

 

இல்லறம் புக்கா

பிரம்மச்சர்யனுக்கும்

இல்லறம் கடந்த

வானப்ரஸ்தனுக்கும்

இல்லறம் துறந்த

சந்நியாசிகளுக்கும்

ஊன் கல்வி அளித்து

காப்பது அவன் கடனே (இ)

 

துரத்தப்பட்டோரையும்

வறுமைப்பட்டோரையும்

அநாதையில் இறந்தோரையும்

காப்பது அவன் கடனே

பிதுர் காரியம் செய்தல்

குல தெய்வக் கடமை

விருந்தோம்பல் புரிதல்

யாவையும் அவன் கடனே (இ)

 

உறவினர் வறுமை ஆற்றல்

தம்மைக் காத்தல் என

இறைப் புலவர் உரைத்தாரே

அறிவாய் மனமே மனமே

ஆறைந்தை மீண்டும் தமிழ்

எழில் கவி நடையில்

எடுத்துரைத்தானே அடியன்

சிவ ராம  தாஸனே (இ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்

No comments: