தமிழ் எந்தன் மொழியடா...
தரணிப் புகழ் கொண்டதடா
தமிழன் என்று கூறடா
தலை நிமிர்ந்து நில்லடா (த)
தொன்று தொட்டு
தோன்றி நின்ற
தொன்மை வாய்ந்த
மொழியடா
பழமை புதுமை
கலந்து நின்ற
பைந்.... தமிழ்
மொழியடா
மூன்று எழுத்து
கொண்டு நின்று
என் மூச்சு பேச்சில்
கலந்து நின்றாள்
சீரும் சிறப்பும்
செம்மை கொண்டு
செந்தமிழ் பெயரைத்
தாங்கி நின்றாள் (த)
இளமை கொண்ட
வளமை கொண்ட
எளிமை கொண்ட
மொழியடா
இனிமை கொண்ட
மென்மை கொண்ட
மேன்மை மிகுந்த
மொழியடா
தூய்மை கொண்ட
தாய்மை மிகுந்த
வியன்மை தந்த
மொழியடா
நுண்மை கொண்ட
ஒண்மை மிகுந்த
இயன்மை கொண்ட
மொழியடா (த)
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறியும்
காவியம் படைக்கும்
மொழியடா
சங்கப் புலவர்கள்
கட்டிக் காத்த
கன்னித் தமிழ்
மொழியடா
சிவ ராம
தாஸன் போற்றி
கவி புனையும்
மொழியடா
செம்மை கொண்டு
மும்மை கொண்ட
தேன் தமிழ் தாய்
மொழியடா ! (த)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment