பெண்மைக்கு உரியதென்பர்
இயல்பான குணமென்பர்
பதிவிரதைக்குரிய குணமதில்
நான்கினில் ஒன்றென்பர்
பொய்யுரையில் அகப்படவே
நால்விதமாய் கோணி நிற்பர்
ஆடவர்க்கும் சில பொழுதில்
வந்திடும் குணம் என்பர்
புகழுரையைக் கேட்ட பின்
புன்முறுவலுடன் பூக்குமென்பர்
நெஞ்சமத்தில் பதற்றம் தரும்
அச்சத்தை துணை கொள்ளும்
முகமதை சிவக்கச் செய்யும்
தம்மையே இகழச் செய்யும்
பாவையின் இளம் பருவத்தே
பூத்திடும் நாணம் அன்றோ !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment