Friday, May 15, 2020

நிதீஷ் ஒரு பட்டுக் குட்டி!


நிதீஷ் ஒரு பட்டுக் குட்டி!

அவன் மிகவும் சுட்டி!

படிப்பிலோ மிகவும் கெட்டி!

அவன் ஒரு சர்க்கரைக் குட்டி!

 

பந்தை உதைப்பான் எட்டி எட்டி!

கதையை விடுவான் ஓட்டி ஓட்டி!

அவனை ஊ க்குவிக்கனும்  தட்டி தட்டி!

அப்பாவிடம் வருவான் ஒட்டி ஒட்டி!

 

நிரம்பி வழியுது பெட்டி பெட்டி!

பொம்மைகள் இருக்குது கொட்டி கொட்டி!

சும்மா இருக்க மாட்டான் வெட்டியாய்!

அவனுக்கு பிடிக்காது திட்டினால்!

 

வாயில் அடிக்க விரும்புவது சீட்டி!

ஊருக்கு போக விரும்புவது ஊட்டி!

அம்மா கொடுப்பது வாயில் ஊட்டி!

ஹாயாய்  உட்காருவான் காலை நீட்டி! 

 

அப்பாவிடம் சொல்வான் கோள் மூட்டி!

அடித்தால் திருப்பித் தருவான் வட்டி!

சாப்பிட பிடித்தது டோஸ்டட் ரொட்டி!

கட்டிக் கொண்டது பட்டு வேட்டி!

 

பூவை வளர்த்தது பூந்தொட்டி!

ஆடும் போது உடைத்தது சட்டி!

விளையாட்டில் பிடித்தது போட்டி!

மொத்தத்தில் அவன்  ஒரு நாட்டி!


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: