Friday, May 15, 2020

நவீன கவிதை

தோள் கொடுத்தால் அவன் தோழன்!

வாள் எடுத்தால் அவன் வீரன்!

 

வில் என்றாலே அவன் விஜயன்!

வேல் என்றாலே அவன் வேலவன்!

 

பால் கொடுத்தாளே அவள் அன்னை!

வால் நீட்டினால் அவன் அனுமன்!

 

யாழ் இசைத்தால் அவன் இசைஞன்!

கோல் அடித்தால் அது கோலாட்டம்!

 

நாள் கொடுத்தால் அவன் நடிகன்!

தேள் கொட்டினால் அது விஷம்!

 

நெல் அடித்தால் அது அரிசி!

செல் அடித்தால் அது நோக்கியா!

 

மெல்லென சென்றால் அவள் பதுமை!

கொல்லென சிரித்தால் அது சிரிப்பு!

 

நில்லெனக் காட்டினால் அது சிக்னல்!

தில்லாக நின்றால் அது வீரம்!   


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: