Wednesday, May 20, 2020

கார்த்திகை தீபவொளி வாழ்த்துக்கள்



கார்த்திகை தீப 
     ஒளி மிளிரட்டுமே
காரிருள் நீக்கி
     அருளட்டுமே
கருணை ஒளி
     பொழியட்டுமே
கனக மழை
     கொட்டட்டுமே (கா)

அடி முடி காணாது
     தேடி நின்று
அரியும் அயனும்
     காணாது நின்று
ஆதியும் அந்தமும்
     இல்லாது நின்று
அருட் பெருஞ்சோதியாய்
     அண்ணாமலையில் (கா)

பஞ்ச பூதத்தின்    
     நாதனவன் 
பஞ்சாட்சர மந்திர 
     நாதனவன்
பஞ்ச எழில் சிர 
     நாதனவன்
பஞ்ச கர நாத 
     எந்தையவன் 

இல்லத்தில் இன்பம் 
     பொங்கிடவே
அன்பெனும் ஊற்று 
     பெருகிடவே
சிவ ராம தாஸன் 
     வேண்டிடவே
சிவனவன் மலை 
     வடிவினிலே (கா)

எண்ணத்தில் நல்லன
     பெருகட்டுமே
அன்னமும் சொர்ணமும்
     சேரட்டுமே
அண்ணாமலை உறை
     அரனாலே
உண்ணாமலை நாதன்
     அருளாலே. (கா)

சந்தர் சோமயாஜிலு (@)
     சிவ ராம தாஸன்

No comments: