Monday, May 18, 2020

வள்ளிக் காதல்



அயிலை ஏந்தும்
     மயிலோன் இங்கே
தையல் வள்ளியை
     ஏந்தி நின்றான்

கிளிகள் இரண்டும்
     கிளைதனில் கொஞ்ச
வஞ்சியை அழகன்
     கொஞ்சி நின்றான்

இரவில் நிலவொளி
     பொலிவுடன் உலவ
நிலவு பொலிவோன்
     குலாவி நின்றான்

செவ்வானம் இங்கே 
     நாணம் மிகுந்து 
சிரம் தனை சாய்த்து
      குனிந்து நின்றது

செந்தில் குமரனின்
     செஞ்சுடர்  நிறத்தில்
வண்ணம் கண்டு நின்று
     தன்னொளி இழந்தது

குஞ்சரி மணாளனை
      நெஞ்சினில் நினைத்து
தஞ்சம் புகுந்திடின்
     அஞ்சேலென அருளிடுவான்

அருவி நீர் பொழிவது போல
     அருள் மழை பொழிவான்
அஞ்சனை சிவைக் குமாரன்
     அழகு மிகு திருக்குமரன்....

சந்தர் சோமயாஜிலு(@)
சிவ ராம தாஸன்

No comments: