Tuesday, May 19, 2020

ஆசிரியை வாழ்த்துப்பா














பூத்துக் குலுங்கிடும்
    பூங்கோதைகளே !
பூவிதழ் மலர்ந்திடும்
    புன்னகைப் பூக்களே !

சின்னஞ் சிறு எழில்
    அரும்பு மொட்டாய் 
சிங்காரமாய் வந்த
    பள்ளிச் சிறுமிகளாள் !

பள்ளிப் பருவமொரு
    பசுமை நிறைப் பருவம்
மலரும் நினைவுகளாய் 
    பின் மகிழும் பருவம்

பசு மரத்தாணியில்
    பதிந்தது போலே
நெஞ்சினில் மறையாது
    நிறைந்திடும் நினைவு !

பள்ளிப் படிப்பறிவும்
    நற்பண்பும் குணமும்
நல்லொழுக்கமும் இணைந்து
    கற்றவை நினைந்து

கல்லூரிப் படிப்பில்
    களிப்பு மிகுதியுடன்
காலைப் பதிக்கும்
    கன்னிப் பெண்களே

சிட்டுப் பறவை போல்
    சிறகடித்து பறந்திடினும்
கடமையும் பொறுப்புடன்
    கவனமுடன் பறவாய்

உயர்ந்த இலக்கினை
    உளமார நினைந்து
உழைப்பைக் காட்டுவாய்
    உச்சத்தை எட்டுவாய்

உறுதியுடன் இருந்திடுவாய்
    உயர் நிலை அடைவாய்
வையம் போற்றி வான் புகழுடன்
    வாழ நல் வாழ்த்துக்கள்.

நல்லவை நினைந்து
    நினைத்ததை அடைந்திட
நெகிழ்சசி நிறைந்ததொரு
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: