Friday, May 15, 2020

ஆணவம் ஏனடா மானுடா


ஆணவம் ஏனடா மானுடா

ஆணவம் ஏனடா (ஆ)

 

கல்லுக்கும் புல்லுக்குமுள்ள

சுதந்திரம் உனக்கிலையே

மரத்திற்கும் மற்றுயிர்க்குமுள்ள

நிம்மதியும் உனக்கிலையே


மெஞ்ஞானம் ஏது விஞ்ஞானமே

பெரிதென மார் தட்டி

படைப்பைத் தவிர யான் யாவும்

படைப்பேன் என்றாய் (ஆ)

 

எனக்கு நிகர் யாருமில்லை

படைத்தது யாவும் எனக்கே

குளோனிங் முறையில் மனிதனைக்

கூட படைப்பேனென்றாய்


தூசிக்கும் சிறிய நுண்ணயிர்

கண்டு ஓடி முடங்கி ஒளிந்தாய்

இரு விழி தனில் நீர் கலக்கம்

இருதயத்தில் பய நடுக்கம் (ஆ)

 

ஆழ்ந்து சிந்தித்து விடு மனிதா

இயற்கையையும் வாழ விடு

வீழ்ந்து விட்டோமேன நினையாதே

தந்த ஆறாமறிவினால் யோசி


இயற்கை அழித்து தான் மட்டுமே

வாழும் ஆசை விட்டு விடு

இறைவனை மதித்து அனைத்தும்

வாழ பாடம் கற்று விடு (ஆ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: