Friday, May 15, 2020

பேசும் சோற்றுப் பருக்கை

தமையன் தம்பிமார்

தமக்கை தங்கைகாள்

தட்டில் இடும் உணவு

அமுது வீணாக்காதே (த)

 

அன்னம் உண்ணும் நீ ! சோற்றுப்

பருக்கை பேசும் மொழி கேள் !

அவனியில் நான் வந்த வழியை

சற்றே கவனமாய் கேள் தம்பி (த)

 

பயிராய் நான் இருக்கையிலே

எலியிடம் தப்பி வந்தேன்

கதிரடிக்கும் போது கலங்கி

நின்று தப்பித்தேன்

 

கடையில் பையன் மூட்டையாய்

கட்டும் போது தப்பித்தேன்

இயந்திரத்தில் அரைக்கும் போது

எதேச்சையாய் தப்பித்தேன்

 

புடைக்கும் போது தப்பித்து

கடையில் விற்கும் போது

சிந்தாமல் தப்பித்தேன்

சமைக்கும் போது கீழே

 

கொட்டாமல் தப்பித்து பின்

இலையில் பரிமாறுகையில்

சிதறாமல் தப்பித்து வந்தேன்

ஏன் எல்லாம் உனக்காக !

 

இத்துனை இடத்தில் தப்பித்து

உந்தன் தட்டில்  வந்த

என்னை வீணடிப்பது தகுமோ

தெருவில் எறிவது நியாயமோ

 

என்னை மென்று நீ உண்டால்

வருத்தமில்லை  கண்ணா

உனக்கு வலிமை தந்தேனெனும்

நினைவு தனில் மகிழ்வேனே !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: