Wednesday, May 20, 2020

ஆதி சங்கரர் ஜெயந்தி



காலடியில் உதித்தாரடி 
கண்ணே நம்
பாரதத்தில் உதித்தாரடி 
ஆதி சங்கரராய் (கா)

ஆல கால விடம் 
உண்ட நாத திரு 
நீல கண்ட 
அவதாரமாய் (கா)

நந்தன வருடமாம்
வைகாசி திங்களாம்
வளர் பிறை திதியாம்
பஞ்சமி திதியில் (கா)

காலம் கடந்து நின்ற
தேசம் கடந்து நின்ற
என்றும் நிலைத்து நின்ற
தத்துவம் தந்திட (கா)

அன்னை ஆர்யாம்பா
எந்தை சிவகுருவின்
தவத் திரு குழந்தையாய்
இந்து தர்மம் தழைத்திட (கா)

நானிலம் தனிலே
நல்லறம் தழைக்க
இல்லறம் துறந்து பால
துறவறம் பூண்டிட (கா)

குரு கோவிந்த பகவத்
பாதர் சீடராய்
அத்வைத தத்துவம்
அவனியில் தழைக்க (கா)

பற்பல ஸ்துதிகள்
பிரம்ம சூத்திரம்
பஜ கோவிந்தமருளி
பக்தி அறம் தழைக்க (கா)

பாத யாத்திரையில்
பாரதம் சுற்றியே
பீடங்கள் அமைத்த
பரம வேதாந்தராய் (கா)

எண்ணிரு பதினாறு
அகவை வரையில்
அவனியில் இருந்த
அவதார புருஷரடி (கா)

எட்டெட்டு பக்தி
படைப்புகள் தனையே
புனைந்து அருளிய
பகவத் பாதாள் (கா)

சிவ சங்கர ஸ்வரூப 
சங்கரர் பாதமதை
சிவ ராம தாஸன் போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கிட (கா)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: