Friday, May 15, 2020

கொரோனா வைரஸ்


 

கொடிய நோயொன்று

வருகுது வருகுது

கொலை வெறியுடனே

வருகுது வருகுது

 

கொரானோ வைரஸென

பெயருடன் வருகுது

கொத்து கொத்தாய் அது

ஆட்களைக் கொல்லுது (கொ)

 

எதிரி மனப்பான்மையுடன்

தாக்கிடத் தான் வருகுது

எதிர் கொண்டு நீ

தயாராய் இருந்திடு

 

எதிர்ப்பு சத்து தரும்

உணவினை உண்டிடு

எச்சில் கண்ட மேனிக்கு

துப்புவதை விட்டுடு (கொ)

 

கண்ணுக்குத் தெரியாது

ஆட்டம் போட்டு சுற்றுது

கண்ட மேனிக்கு உலகு

எங்கும் சுற்றி திரியுது

 

கடுகு மிளகு ரசம் பருகிட

நோய் தனை எதிர்க்குது

கண் மூக்கு காது தனை

கை கழுவி தொட்டுடு (கொ)

 

சுத்தமே அதன் எதிரியெனும்

வித்தையை அறிந்திடு

சுத்தமொடு நாம் இருந்தால்

சத்தமில்லாமல் போகுது

 

கத்தியின்றி இரத்தமின்றி

போராடி ஜெயிப்போம்

ஒத்துமையாய் போராடி

அதனை நாம் வெல்வோம்

 

கண்ட படி சுற்றாது நாம்

வீட்டோடு இருந்திடுவோம்

கண்டபடி உண்ணாது கட்டுக்

கோப்பாய் இருந்திடுவோம்

 

தொண்டை வறட்சியிலாது

ஈரப்பதம் கொண்டிடுவோம்

சுண்டக் காய்ச்சிய நீரினைப்

பருகி நோயினை எதிர்ப்போம்

 

வழலை நீர் கொண்டு நாம்

கை கால் கழுவிடுவோம்

வரும் முன்னே நாம் காப்போம்

விரட்டி அவனை ஒழிப்போம்

 

வைட்டமின் சி மிகுந்த பல

கனிகளை உண்ணுவோம்

வைத்தியர் பரிந்துரைப்பதை

தவறாது கடைப்பிடிப்போம்

 

கரம் நீட்டி கை குலுக்குவதை

அறவே விடுப்போம்

கூட்டமாய் கூடும் இடம்

செல்வதை தவிர்ப்போம்

 

கரம் இணையாது மனம்

இணைந்து அதை எதிர்ப்போம்

கடையன் சிவ ராம தாஸன்

கவி நடையில் உரைத்தேன்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ரா தாஸன்

 

 

 


No comments: