Friday, May 15, 2020

கொரோனாவை வென்றிடுவோம்


வென்றிடுவோம் நாம்

வென்றிடுவோம் இன்று

வையத்தை உலுக்கிடும்

கொரோனாவை நாம்...(வெ)

  

எதிர் வரும் நாட்கள் மிக

முக்கியத் தருணமே ! மிக

எச்சரிக்கையுடன் கையாண்டிட

வேண்டிய தருணமே !


அண்டை அயல் நாட்டின்

பாதிப்பைக் கண்டுணர்ந்து

அதி சாதுர்ய முன்னெச்செரிக்கை

சாணக்கிய திட்டமிதுவே !

 

ஆறு கோடி மக்கட் தொகை

கொண்ட இத்தாலிக்கே

மூன்று நான்காம் வாரத்தின்

பாதிப்பே இத்துனைவெனில்


நூற்றி முப்பத்தி ஐந்து கோடி

மக்கட்தொகை இந்தியாவில்

பாதிப்பினை தடுப்பது திட்டத்தால்

மட்டுமென உணர்ந்திடுவோம் !

 

ஓவ்வொரு இந்தியக் குடிமகனின்

ஒத்துழைப்பால் மட்டுமே

ஒற்றுமை உணர்வுடன் கூடிய

மிக உறு துணையுடனே


சுயக் கட்டுப்பாட்டினைக்

கொண்டிடுவோம் சுய

ஊரடங்கு முறை ஏற்று

வெற்றிக் கொண்டிடுவோம் (வெ)

 

நுண்ணுயிர் உயிர் கொல்லி

கொரோனா வைரஸ்ஸின் காலம்

எழிரு நாட்கள் மட்டுமே பின் தானே

மடிந்து மறைந்த்து ஒழியுமே


கூட்டம் கூடாது சேர்ந்து சுற்றாது

தனித்தனியே தனித்திருந்தால்

அதுவே பரவாது செத்து ஒழியும்

தேசம் அமைதி நிம்மதி கொள்ளும் (வெ)

 

சுய ஒழுக்கம் கடைப் பிடித்து

சுத்தம் சுகாதாரமாய் இருந்து

சுற்றுப்புறச்சூழல் காத்து நின்று

சுயக் கட்டுப்பாட்டு உடனே


சுதந்திரமாய் சுற்றாது நின்று நாற்

சுவருக்குள்ளே தங்கி நின்று

சுய ஊரடங்கு ஏற்று நின்று

நாம் வென்று காட்டிடுவோம் !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: