Friday, May 15, 2020

மெய்

மெய்யினை உணர

மெய்யினை தந்தான்

மெய்ப் பொருள் ஆன

மெய்யன் அவன்


மெய்யே மெய்யென

மேய்ந்து நின்றால்

மெய்யினைக் காணுதல்

எங்ஙனமோ ! மனமே ! (மெ)

 

பொய்யினை மெய்யாய்

காட்டிடும் உலகமிது

கானல் நீர் சுவை தரும்

நீராய் காணும் உலகமிது


செய்யன செய்யாது

செய்யாது செய்திடும்

செய்யத் தூண்டிடும்

வையகம் இது இது (மெ)

 

காம குரோதம் கோப

தாபம் அகற்றி விடு

பந்த பாசம் சொந்தம்

சுகம் பற்று விட்டு விடு


சிவ ராம தாஸன்

நிதமும் பணியும்

இறைவன் பத மலர்

இறுக பற்றி விடு (மெ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 


No comments: