Friday, May 15, 2020

விளக்கு


விலக்குவது விளக்கல்லவோ

ஒளி தந்திட காரிருளை (வி)

 

கிழக்கு முகம்

தனில் விளக்கு

ஏற்றிட துயர் விலகுமே

 

மேற்கு முகம்

தனில் விளக்கு

ஏற்றிட பகை பெருகுமே

 

வடக்கு முகம்

தனில் விளக்கு

ஏற்றிட அறிவு ஓங்குமே

 

தெற்கு முகம்

தனில் விளக்கு

ஏற்றிட பாவம் கூடிடுமே (வி)

 

மாதவன் திரு மார்பினில்

உறைந்திடும் மாதவி

மனமுவந்து உறைவாள்

தீப விளக்கோளியிலே

 

மலைமகள் கலைமகள்

போற்றும் தேவியவள்

மங்களம் யாவும் மடை

வெள்ளமென பொழிவாளே

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 


No comments: