Friday, May 15, 2020

ஜல்லிக்கட்டு மாணவ கடல் அலை


சுட்டும் வெயிலில்

காய்ந்து நின்று

கொட்டும் பனியில்

உறைந்து நின்று

சொட்டும் மழையில்

நனைந்து நினறு

பட்டும் படாமல் (அரசு)

இருந்து நின்றினும்

 

வீட்டு சுகத்தை

மறந்து நின்று

ஒட்டு வாங்கும்

அரசியல் கலக்காது

விட்டுக் கொடுக்காது

விடா முயற்சியுடன்

கூட்டு முயற்சியால்

முனைந்து போராடி

 

பட்டித் தொட்டி

பரவி நின்று

தட்டிக் கேட்கும்

மாணவர் கூட்டம்

ஜல்லிக்கட்டுக்கு

குரல் கொடுத்து

தமிழர் உரிமை

நிலை நாட்டி

 

மாணவ அலையென

பாய்ந்து வந்து

கடல் அலையுடன்

சங்கமித்திடும்

வெற்றி அலை

தொட்டு வாகை சூடி

கடல் அலையினும்

மிஞ்சிய கூட்டம்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: